தமிழ்நாடு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன் மனைவி பலி

12th Jun 2022 12:25 PM

ADVERTISEMENT

 

திருவாடனை: திருவாடானை அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மேல் பன்னையூர் பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த கனவின் கணவன் மனைவி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலே இருவரும் பலியானார்கள்.

திருவாடானை அருகே பாசானி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (50), அவரது மனைவி சிநேகவல்லி (45) ஆகிய இருவரும் தனக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தில் பாசாணி கிராமத்திலிருந்து ஆர்.எஸ் .மங்கலம் அருகே உள்ள அளவிடங்கான்  கிராமத்திற்கு உறவினர் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருக்கும் போது மேல் பன்னையூர் பாலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அண்ணாதுரையும் அவரது மனைவி சிநேகவல்லியும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

ADVERTISEMENT

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விபத்துக்குள்ளான இருசக்கர வாகனம்.

தகவலறிந்த திருவாடானை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்

இதையும் படிக்க | சிதம்பரம் நடராஜா் கோயில் நலனில் உங்களுக்கு அக்கறை உள்ளதா?-21க்குள் கருத்துக்களை தெரிவிக்கலாம்

ADVERTISEMENT
ADVERTISEMENT