தமிழ்நாடு

புதுச்சேரிக்கு வந்த சுற்றுலா சொகுசு கப்பலுக்கு அனுமதி மறுப்பு: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

10th Jun 2022 09:37 AM

ADVERTISEMENT


புதுச்சேரிக்கு வந்த சுற்றுலா சொகுசு கப்பலுக்கு அரசு சார்பில் அனுமதி ஏதும் தரவில்லை என்பதால், ஆழ் கடலிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் சொகுசு கப்பலில் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சென்னை-புதுச்சேரி இடையே தனியாருக்கு சொந்தமான காட்லியா சி குரூஸ் சொகுசு சுற்றுலா கப்பல், அண்மையில் சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதனை தொடங்கி வைத்தார்.

தனியாருக்குச் சொந்தமான இந்த சொகுசு கப்பல் சென்னையிலிருந்து புறப்பட்டு விசாகப்பட்டினம் வழியாக சென்று வெள்ளிக்கிழமை புதுச்சேரிக்கு வந்தடையும் என்று கூறப்பட்டது.

இந்த பிரம்மாண்ட சொகுசு கப்பலில் மதுக்கூடம், நடனம், சூதாட்டம் உள்ளிட்ட கலாச்சாரத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இருக்கும் என்பதால், இதனை அனுமதிக்கக்கூடாது என்று, புதுச்சேரி உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் பொது நல அமைப்பு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக பேசிய புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், இந்த சொகுசு கப்பல் தொடர்பாக எந்தவித தகவலும் புதுவை அரசுக்கு இல்லை. அனுமதியும் அளிக்கப்படவில்லை என்றும், அவ்வாறு சொகுசு கப்பல் வந்தாலும் சூதாட்டம் போன்ற கலாசாரத்துக்கு எதிரான நிகழ்வுகளுக்கு அனுமதி தரப்பட மாட்டாது என்றும் தெரிவித்திருந்தார்.

 புதுவை அரசு தரப்பிலும் அதற்கு அனுமதி தரப்படவில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில், அந்த சொகுசு கப்பல் வெள்ளிக்கிழமை காலை புதுச்சேரி அருகே கடல் பகுதிக்கு வந்து சேர்ந்தது. புதுச்சேரி வம்பகீரபாலயம் கடற்கரை அருகே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஆழ்கடலில் அந்த சொகுசு கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த கப்பலை கடற்கரை பகுதியில் இருந்து பொதுமக்கள் பார்வையிட்டனர். புதுவை அரசு சார்பில் இந்த கப்பலுக்கு அனுமதி ஏதும் தரவில்லை என்பதால், ஆழ் கடலிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சொகுசு கப்பலில் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதையும் படிக்க |மாநிலங்களவைத் தோ்தல்: அனில் தேஷ்முக், நவாப் மாலிக்பரோல் மனுக்கள் நிராகரிப்பு

ADVERTISEMENT
ADVERTISEMENT