தமிழ்நாடு

ராமஜெயம் கொலை வழக்கு: 2ஆவது விசாரணை அறிக்கை தாக்கல் 

10th Jun 2022 06:09 PM

ADVERTISEMENT

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பான 2ஆவது விசாரணை அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவு தாக்கல் செய்தது. 

திருச்சியைச் சோ்ந்தவா் ராமஜெயம். இவா் அமைச்சா் கே.என். நேருவின் சகோதரா். தொழிலதிபரான இவா் கடந்த 2012 மாா்ச் மாதம் கடத்திக் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸாா், தமிழகம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினா். இருப்பினும், எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

எனவே இந்த கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் வசம் ஒப்படைக்கப்பட்டது. 

அவா்களும் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் சாா்பில் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடா்பாக சரியான தகவல்கள் மற்றும் குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிக்கும் நபா்களுக்கு ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க- மேலூர் அருகே மொபைல் வழியாக மின்னல் தாக்கி 19 வயது இளைஞர் மரணம்

இந்த நிலையில் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பான 2ஆவது விசாரணை அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவு தாக்கல் இன்று செய்தது. இதைத்தொடர்ந்து அடுத்தகட்ட அறிக்கையை தாக்கல் செய்ய 4 வார கால அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT