தமிழ்நாடு

மீண்டும் வேகமெடுத்துள்ள கரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

10th Jun 2022 12:52 PM

ADVERTISEMENT

 

தமிநாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கரோனா நோய்த்தொற்றின் முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை ஆகியவை முடிந்து, கடந்த இரண்டு மாதங்களாக அந்தப் பெயரை மறந்திருந்த நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் வைரசின் மாறுபட்ட வடிவங்களினாலான வைரசால் தமிழ்நாட்டில் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி வருவதும் மீண்டும் ஒருவித அச்சத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 152 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். கடந்த மூன்று மாதங்களில் இது மிகவும் அதிகமானது என்றும், மகாராஷ்டிரம் மற்றும் கேரளத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும், இந்த இரண்டு மாநிலங்களிலிருந்து மட்டும் கடந்த வாரத்தில் கரோனா தொற்றினால் 60 சதவீதம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தத்தில் 10 மாநிலங்களில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

ADVERTISEMENT

இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட வழிகாட்டி நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி, கரோனா தொற்று பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதையும் படிக்க |ஆன்லைன் ரம்மி தடை: சிறப்பு சட்டக் குழு அமைத்து முதல்வர் உத்தரவு

ADVERTISEMENT
ADVERTISEMENT