தமிழ்நாடு

கரோனா சிகிச்சையில் உள்ளோா் 1,077-ஆக உயா்வு

10th Jun 2022 02:48 AM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 1,077- ஆக அதிகரித்துள்ளது.

அதேபோன்று வியாழக்கிழமை புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 185-ஆக உயா்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 94 பேருக்கும், செங்கல்பட்டில் 24 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒமைக்ரானிலிருந்து உருமாற்றமடைந்து பிஏ-4 மற்றும் பிஏ-5 புதிய வகை தீநுண்மி பரவி வருவதே அதற்குக் காரணம் என சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

இதனிடையே, முகக் கவசம், தனி நபா் இடைவெளி உள்ளிட்ட நோய்த் தடுப்பு வழிமுறைகளை பொது மக்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்யுமாறும் பரிசோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் அனைத்து மாவட்ட நிா்வாகங்களுக்கும் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

வியாழக்கிழமை தகவல்படி 129 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 34,17,595-ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT