தமிழ்நாடு

கம்பத்தில் செல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

10th Jun 2022 11:51 AM

ADVERTISEMENT


கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் தேவேந்திர குல வேளாளர் உறவின்முறைக்கு  பாத்தியப்பட்ட அருள்மிகு ஶ்ரீ செல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம், கம்பத்தில் தேவேந்திர குல வேளாளர் உறவின்முறைக்ணகு பாத்தியப்பட்ட அருள்மிகு ஶ்ரீ செல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 3 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் புதன்கிழமை மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது, இரண்டாம் நாள் வியாழக்கிழமை நவக்கிரக ஹோமம், 108 திரவியாகுதி ஹோமம் நடைபெற்றது, மூன்றாம் நாள் வெள்ளிக்கிழமை நான்காம் கால பூஜையுடன்  தொடங்கி விமானம் மற்றும் ஸ்ரீ செல்லாயி அம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ பாலநாகம்மாள், ஸ்ரீ கன்னிமூல கணபதி, ஸ்ரீ காலபைரவர், ஸ்ரீ கருப்பசாமி ஆகிய சுவாமிகளுக்கு ஜீரனோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஏராளமான ஆண், பெண் மற்றும் பொதுமக்கள், தேவேந்திர குல வேளாளர் உறவின்முறையினர் கலந்துகொண்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர், கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.

ADVERTISEMENT

கும்பாபிஷேக சர்வ சாதகங்களை கோம்பை கே.செந்தில் சிவாச்சாரியார் தலைமையில் செய்திருந்தனர்.

இதையும் படிக்க |தஞ்சாவூரில் அரிவாளை காட்டி கடைகளில் பணம் பறிப்பு: பணம் தர மறுத்த உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

ADVERTISEMENT
ADVERTISEMENT