தமிழ்நாடு

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனுக்கு ஜாமீன்

9th Jun 2022 03:04 PM

ADVERTISEMENT

 

சிபிஐ காவலிலிருந்த கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலம், மான்ஸா பகுதியில் தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு வந்த மின் திட்டப் பணிகளில் வேலை செய்ய 263 சீனர்களுக்கு முறைகேடாக ஒரே மாதத்தில் விசா வழங்க ரூ. 50 லட்சம் லஞ்சமாக பெற்றதாக கார்த்தி சிதம்பரம் உள்பட 5 பேர் மீது சிபிஐ காவல்துறையினர் கடந்த மே-17 வழக்குப் பதிவு செய்தனர்.

தொடர்ந்து, கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான சென்னை வீடு உள்பட மும்பை, ஒடிசா, கர்நாடகம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 10 இடங்களில்  சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க..கைதான அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் காவல் நீட்டிப்பு

சோதனையின்போது கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனையும் மே-19 ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். 

இந்நிலையில், இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆடிட்டர் பாஸ்கரராமனுக்கு ஜாமீன் வழங்குவதாக உத்தரவு பிறப்பித்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT