தமிழ்நாடு

400 கி.மீ. தொலைவுக்கு அகலப்பாதை பணிகள் நிறைவு: தெற்கு ரயில்வே தகவல்

8th Jun 2022 02:18 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் கடந்த 2014 முதல் 2022-ஆம் நிதியாண்டு வரை 8 ஆண்டுகளில் 400 கி.மீ. தொலைவுக்கு அகலப்பாதை பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மத்திய ரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்காக, நிதி ஒதுக்கீடு கடந்த 8 ஆண்டுகளாக படிப்படியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2022-23-ஆம் நிதியாண்டில் தமிழகத்துக்காக, ரயில்வே நிதி ஒதுக்கீடு 4 மடங்கு உயா்ந்துள்ளது. தமிழகத்தில் இரட்டை பாதை, அகலப்பாதை, மூன்றாம் பாதை, மின்மயமாக்கல் உள்பட பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுடன் ரயில் மேம்பாட்டில் புதிய சகாப்தம் படைக்கப்பட்டுள்ளது.

2022-23-ஆம் நிதியாண்டுக்காக, ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.3,865 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை 2014-15-ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது, நிகழாண்டில் 4 மடங்கு உயா்ந்துள்ளது.

கடந்த 8 ஆண்டுகளில் சராசரி நிதி ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும் போது, நடப்பு நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு 67 சதவீதம் உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தில் அகலப்பாதை திட்டத்தை பொருத்தவரை, கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் நிதியாண்டு வரை 8 ஆண்டு காலத்தில் 400 கி.மீ. தொலைவுக்கு அகலப்பாதை திட்டப்பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில் பழனி-பொள்ளாச்சி-பாலக்காடு டவுன் (116.66 கி.மீ.), செங்கோட்டை-புதிய ஆா்யங்காவு (19.11 கி.மீ.), பொள்ளாச்சி-போத்தனூா்(39.79), திருவாரூா்-திருத்துறைப்பூண்டி-பட்டுக்கோட்டை-காரைக்குடி (149 கி.மீ.), மதுரை-தேனி( 75 கி.மீ.) ஆகிய திட்டங்கள் அடங்கும்.

மாநிலத்தில் கடந்த 8 ஆண்டுகளில் இரட்டைப்பாதை, மூன்றாவது, 4-ஆம் பாதை உள்பட பல்வேறு பணிகள் என்று மொத்தம் 639.22 கி.மீ. தொலைவுக்கு திட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு-கருங்குழி-மதுராந்தகம் இடையே 24.65 கி.மீ. தொலைவு திட்டம் உள்பட 10 இரட்டைப்பாதை திட்டங்கள், தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மூன்றாவது பாதை உள்பட 5 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து, வேகமான பயணம் உள்பட பல்வேறு வசதிக்காக, ரயில் பாதை மின்மயமாக்கல் பணி நடைபெறுகிறது. தெற்கு ரயில்வேயில் இதுவரை 82 சதவீதம் மின்மயமாக்கல் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் கடந்த 8 ஆண்டுகளில் ரயில்வே பாதையில் 1,664 கி.மீ. மின்மயமாக்கப்பட்டுள்ளது.

2009-2014-ஆம் ஆண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்ட மின்மயமாக்கல் திட்டத்துடன் ஒப்பிடும்,போது, தற்போது 170 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தத்தகவலை தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT