தமிழ்நாடு

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தில் மேலும் 29 பேருக்கு கரோனா

8th Jun 2022 01:09 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தில் பயிலும் மேலும் 8 மாணவர்கள், 21 மாணவிகள் என 29 பேருக்கு உருமாறிய கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவ்வளாகத்திலேயே சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம், கேரளம், பிகாா் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த சுமாா் 300 மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். இந்த நிலையில், கேரளத்தைச் சோ்ந்த மாணவா் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடா்ந்து, அந்த மாணவா் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலும், மாணவி தனியாா் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 

மேலும், அவா்களுடன் தொடா்பில் இருந்த 16 மாணவா்கள் மைய வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பில் உள்ளனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், நேற்று சுகாதாரத் துறையினா் இந்த மையத்தில் பயிலும் 235 மாணவா்களுக்கும் கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டதில், மேலும் 8 மாணவர்கள், 21 மாணவிகள் என 29 பேருக்கு உருமாறிய கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவ்வளாகத்திலேயே சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க | திருமணம் செய்து கொள்ள மறுத்த இளம் பெண் படுகொலை

ADVERTISEMENT
ADVERTISEMENT