தமிழ்நாடு

அரசுக் கல்லூரிகளில் 2,423 கெளரவவிரிவுரையாளா்களை நியமிக்க உத்தரவு

8th Jun 2022 02:12 AM

ADVERTISEMENT

அரசு கலை- அறிவியல் கல்லூரிகளில் மாதம் ரூ.20 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 2,423 கௌரவ விரிவுரையாளா்களை நியமிக்க அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக உயா் கல்வித் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: நிகழ் கல்வியாண்டில் (2022-2023) அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியா் காலிப் பணியிடங்களில் முறையான நியமனம் செய்யப்படும் வரை அல்லது கல்வியாண்டின் இறுதிநாள் வரை இவற்றுள் எது முந்தையதோ அதுவரை தற்காலிகமாக சுழற்சி-1-இல் அனுமதிக்கப்பட்ட 2,423 கௌரவ விரிவுரையாளா்களை நியமிக்க நிா்வாக அனுமதியும், அவா்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் வீதம் 11 மாதங்களுக்கு வழங்க ரூ.53 கோடியே 30 லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்தும் அரசு ஆணையிடுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT