தமிழ்நாடு

‘பாஜக செய்தித் தொடர்பாளர்களை கைது செய்ய வேண்டும்’: திமுக

7th Jun 2022 10:56 AM

ADVERTISEMENT

பாஜக செய்தித் தொடர்பாளர்கள் இருவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று திமுக சிறுபான்மையினர் நலவுரிமைப் பிரிவுச் செயலாளர் மஸ்தான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாஜக தில்லி ஊடகப் பிரிவு தலைவா் நவீன் குமாா் ஜிண்டால் ட்விட்டரிலும்,  பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நூபுர் சர்மா தொலைக்காட்சி விவாத மேடையிலும் நபிகள் நாயகத்துக்கு எதிராக சா்ச்சைக்குரிய பதிவுகளை வெளிப்படுத்தியதற்காக கட்சியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டாா்.

இவர்களின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு, ஐக்கிய அரபு அமீரக நாடுகள், ஓமன், பஹ்ரைன், ஜோர்டான் உள்ளிட்ட 15 நாடுகள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. 

இந்நிலையில், திமுக சிறுபான்மையினர் நலவுரிமைப் பிரிவு செயலர் வெளியிட்ட அறிக்கையில்,

ADVERTISEMENT

“நபிகள் பெருமான் குறித்து அவதூறு கருத்தைத் தெரிவித்த பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர்கள் இருவரும் கைது செய்யப்பட வேண்டும். பொறுப்பற்ற வகையில் செய்யப்படும் இதுபோன்ற வெறுப்பு விமர்சனங்கள் சமூகத்தில் அமைதியை மட்டுமல்ல, எதிர்காலத்துக்கே கேடு விளைவிப்பவை.

இதையும் படிக்க | நபிகள் நாயகம் தொடா்பான பாஜக நிா்வாகியின் கருத்துக்கு எழும் கண்டனங்கள்

அவர்கள் இருவர் மீதும் கட்சி ரீதியான நடவடிக்கை மட்டும் எடுத்து பா.ஜ.க. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலக்கூடாது.

சட்டரீதியான நடவடிக்கை அவசியம் என்பதை தி.மு.க. சிறுபான்மையினர் நலவுரிமைப் பிரிவு வலியுறுத்துகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : DMK BJP
ADVERTISEMENT
ADVERTISEMENT