தமிழ்நாடு

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் போராட்டம்: அதிகாரிகள் சமரசம்

2nd Jun 2022 11:23 AM

ADVERTISEMENT


கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்வதற்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததைக் கண்டித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இரவு நேரத்தில் பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.  இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. 

இந்நிலையில், நேற்று ஜூன் மாதத்தின் முதல் நாள் என்பதுடன் சுப முகூர்த்த நாள் என்பதால் வெளியூர் செல்வதற்காக மக்கள் அதிகயளவில் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தனர்.

ஆனால், நேற்று புதன்கிழமை மாலை முதல்  இரவு 10 மணி வரை சாதாரண கட்டண பேருந்துகளைவிட சொகுசு பேருந்துகள் மட்டுமே அதிகயளவில் இயக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ADVERTISEMENT

இதையடுத்து ஒன்றுதிரண்ட பொதுமக்கள் பேருந்துகளை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்தடுத்து சாதாரண கட்டண பேருந்தகள் இயக்கப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து மக்கள் மறியலை கைவிட்டு தங்களின் பயணத்தை தொடர்ந்தனர். 

கோயம்பேடு பேருந்துநிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

இதையும் படிக்க | பொதுத் தேர்வு எழுதாத 6.79 லட்சம் மாணவர்களுக்கு துணைத்தேர்வு

ADVERTISEMENT
ADVERTISEMENT