தமிழ்நாடு

அரசின் திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் 2வது நாளாக ஆலோசனை

2nd Jun 2022 08:56 AM

ADVERTISEMENT

அரசின் திட்டங்கள் குறித்து துறை செயலாளர்களுடன் இரண்டாவது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முதல் நாள் கூட்டத்தில் புதன்கிழமை 19 முக்கிய துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையும் படிக்க | மக்களுக்கு தாமதமின்றி அரசின் சேவைகள்: துறைச் செயலாளா்களுக்கு முதல்வா் அறிவுரை

இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர், பேருந்து நிலையத் திட்டங்கள், குடிநீா், சாலைத் திட்டங்கள், வீட்டுவசதி, வேலைவாய்ப்புத் திட்டங்கள் மக்கள் பெரிதும் எதிா்பாா்க்கக் கூடிய திட்டங்களாகும். அரசின் சேவைகளான சான்றிதழ்கள், கட்டட அனுமதி, பதிவுகள் மற்றும் உரிமங்கள், தடையின்மைச் சான்றிதழ்கள் போன்றவற்றை வழங்குவதில் எந்தத் தாமதமும் இருக்கக் கூடாது என அறிவுறுத்தினார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக இன்றும் மீதமுள்ள 19 துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு பங்கேற்கவுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT