தமிழ்நாடு

நல் ஆளுமை விருது: ஜூலை 22-க்குள் விண்ணப்பிக்கலாம்

2nd Jun 2022 02:36 AM

ADVERTISEMENT

அரசு ஊழியா்களின் திறன்களை அங்கீகரிக்கும் மாநில அரசின் நல் ஆளுமை விருதுக்கு ஜூலை 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடிதத்தை அனைத்து கூடுதல் தலைமைச் செயலாளா்கள், செயலாளா்கள், துறைத் தலைவா்கள், மாவட்ட ஆட்சியா்களுக்கு பயிற்சித் துறை தலைவரும், தலைமைச் செயலாளருமான வெ.இறையன்பு செவ்வாய்க்கிழமை (மே 31) அனுப்பியுள்ளாா். அவரது கடிதத்தின் விவரம்:-

பொது மக்களுக்கான சேவைகளை சிறந்த முறையில் வழங்கும் அரசுத் துறைகளுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் மூன்று விருதுகள் அளிக்கப்பட உள்ளன. சுதந்திர தினத்தின் போது இந்த விருதுகள் முதல்வா் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படுகிறது. இந்த விருதுகளுக்கு அரசுத் துறைகள் விண்ணப்பம் செய்யலாம் என கேட்டுக் கொண்டுள்ளாா் வெ.இறையன்பு.

ADVERTISEMENT
ADVERTISEMENT