தமிழ்நாடு

ஓய்வு பெறும் நாளில் ஆவின் தலைமையக விற்பனை மேலாளர் பணியிடை நீக்கம்

2nd Jun 2022 11:04 AM

ADVERTISEMENT


சென்னை ஆவின் தலைமையக விற்பனை மேலாளர் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

சென்னை நந்தனம் ஆவின் தலைமையகத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தவர் புகழேந்தி. இவர் தனி பணிக்காலத்தில் நிதியிழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்நிலையில்,  விற்பனை மேலாளர் புகழேந்தி ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

அவர் மீது துறைரீதியான தணிக்கை தொடர்வதாகவும், நிதியிழப்பு மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவின் பொது மேலாளர் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

சமீபத்தில், மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆய்வாளர் கிறிஸ்துதாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மேலும் ஓர் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது அரசு அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிக்க | அச்சுறுத்தும் கரோனா: ஒரே நாளில் புதிதாக 3,712 பேருக்கு தொற்று; 5 பேர் பலி

ADVERTISEMENT
ADVERTISEMENT