தமிழ்நாடு

தமிழகத்தில் மூன்று நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

2nd Jun 2022 01:58 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் மூன்று நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 

தமிழக பகுதிகளின் மேடுக்கில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக, 

02.06.22: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை
பெய்யக்கூடும். 

ADVERTISEMENT

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

03.06.22: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை
பெய்யக்கூடும். 

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி,  திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

05.06.22, 06.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (செ.மீ)

குழித்துறை 5, கொடைக்கானல் படகு குழாம், உதகை 4, ஆம்பூர், கெட்டி, களியல், கொடைக்கானல் தலா 3, எமரால்டு, செருமுல்லி தலா 2, குன்னூர், பொன்னி அணை, சூரளகோடு, பில்லிமலை எஸ்டேன் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

02.06.22: தென் மேற்கு வங்கக்கடலோரப் பகுதி, குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்தக்காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

லட்சத்தீவு, கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

மேற்குறிப்பிட்ட நாள்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

ADVERTISEMENT
ADVERTISEMENT