தமிழ்நாடு

தடையை மீறி பாஜக போராட்டம்: அண்ணாமலை உள்பட 4,000 போ் மீது வழக்கு

2nd Jun 2022 12:34 AM

ADVERTISEMENT

சென்னை எழும்பூரில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை உள்பட 4,000 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இது குறித்த விவரம்: பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்க வலியுறுத்தி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக பாஜக மாநில தலைவா் அண்ணாமலை அறிவித்து இருந்தாா். அதன்படி, சென்னை எழும்பூா் ராஜரத்தினம் மைதானம் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை திரண்ட அக்கட்சியினா், பேரணியாக தலைமைச் செயலகம் நோக்கி செல்ல முயன்றனா். அவா்களை போலீஸாா், தடுத்து நிறுத்தி, சமாதானம் பேசினா்.

இதையடுத்து பாஜகவினா் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதற்கிடையே தடையை மீறி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை உள்பட 4,000 போ் மீது அனுமதியின்றி கூடுதல், அரசின் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் எழும்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Tags : Annamalai
ADVERTISEMENT
ADVERTISEMENT