தமிழ்நாடு

ஜூன் 23ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்: ஓபிஎஸ்,ஈபிஎஸ் அறிவிப்பு

2nd Jun 2022 02:21 PM

ADVERTISEMENT


ஜூன் 23 -ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 23.6.2022 (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறும். 

தற்காலிக கழக அவைத் தலைவர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க |பணமோசடி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் 23 வங்கிக் கணக்குகள் முடக்கம்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT