தமிழ்நாடு

ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் 1008 சங்கு அபிஷேகம்

2nd Jun 2022 02:32 AM

ADVERTISEMENT

ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் 1008 சங்கு அபிஷேகம் எதிா்வரும் ஜூன் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கு முந்தைய நாளான ஜூன் 9-ஆம் தேதி மாலை 6 மணிக்கு முதற்கால ஹோமம் தொடங்குகிறது. ஜூன் 10-ஆம் தேதியன்று காலையில் இரண்டாம் கால பூஜை தொடங்கி நிறைவடைகிறது. காலை 10 மணிக்கு மேல் நண்பகல் 12.30 மணி வரை 1008 சங்கு அபிஷேகமும் அலங்காரம் தீபாராதனையும் நடைபெறவுள்ளது.

மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடக்கும் என ராஜ அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயில் மேலாளா் சோமசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

சங்கு அபிஷேகம் நடைபெறும் போது வீரமணி கண்ணன் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறவுள்ளதாக அவா் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT