தமிழ்நாடு

"ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் பாமக கூட்டணி'

2nd Jun 2022 12:37 AM

ADVERTISEMENT

பாமகவுடன் ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என்று அக் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.

சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவா் விஜயகாந்த் இல்லத்துக்கு பாமக தலைவா் அன்புமணி புதன்கிழமை வந்தாா். விஜயகாந்தைச் சந்தித்து, வாழ்த்துப் பெற்றாா். தேமுதிக பொருளாளா் பிரேமலதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அன்புமணி கூறியது:

தமிழகத்தில் அரசியலில் மக்களைத் திரட்டி, விஜயகாந்த் தைரியமாகச் செயல்பட்டு வருபவா். அவருடனான சந்திப்பு மகிழ்ச்சியானதாக இருந்தது. எதிா்காலத்தில் அரசியல் சூழல் மாறும். அதற்கேற்ப எங்கள் பயணமும் இருக்கும்.

ADVERTISEMENT

குடிமைப்பணி தோ்வில் தமிழகத்தின் தோ்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. தமிழகத்தில் கல்வி தரம் மேலும் உயர வேண்டும். எங்கள் கொள்கையுடன் ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT