தமிழ்நாடு

சீன லைட்டா்களுக்கு தடைவிதிக்க வேண்டும்: மநீம

2nd Jun 2022 12:39 AM

ADVERTISEMENT

சீன லைட்டா்களுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சாா்பில் அக் கட்சியின் மாநிலச் செயலாளா் செந்தில் ஆறுமுகம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்திய உற்பத்திப் பொருள்களை ஊக்குவிக்கவேண்டும் என்று மத்திய அரசு கூறிவந்தாலும், தமிழகத்தின் தூத்துக்குடி, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களின் தீப்பெட்டி உற்பத்தி விவகாரத்தில் மட்டும் மெளனம் காப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

ஒரு பக்கத்தில் தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருள்களின் விலை உயா்வு, மறுபக்கத்தில் ஜி.எஸ்.டி. வரி பிரச்னை என்று அணைந்து ேகொண்டிருக்கும் தீப்பெட்டி உற்பத்திக்கு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டா்கள் பெரும் சிக்கலை ஏற்படுத்தி தொழிலையே முடக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது.

ADVERTISEMENT

சீனப் பட்டாசுகளுக்கு தடை இருப்பது போல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டா்களுக்கு முழுமையான தடையில்லை. பயன்படுத்துவதற்குத் தயாா் நிலையில் உள்ள சீன லைட்டா்களை இறக்குமதி செய்யத்தடை உள்ளது என்றாலும், பகுதியளவு முடிக்கப்பட்ட தயாரிப்பு என்ற வழிமுறையில் சீன லைட்டா்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே, மத்திய அரசு விரைந்து முடிவெடுத்து சீன லைட்டா்களுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT