தமிழ்நாடு

வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவோம்: சித்தராமையா பேட்டி

30th Jul 2022 03:43 PM

ADVERTISEMENT


சென்னை: வரும் தேர்தலில் பாஜக, ஆர்எஸ்எஸ்-ஐ வீழ்த்துவோம் என்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பின்னர் கர்நாடகம் முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். 

பின்னர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக விருது பெறுவதற்காக தமிழகம் வந்துள்ளேன். விருது பெறுவது மிகவும் மகிழ்ச்சி.

முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். நான் கேட்டது, படித்ததில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுகிறது என்பதுதான். 

ADVERTISEMENT

 இதையும் படிக்க | நாட்டில் ஒரு தேசியமொழி சாத்தியமில்லை: முதல்வர் ஸ்டாலின்

பெரியாரால் திராவிட இயக்கம் மிகவும் உறுதியானது. அம்பேத்கர், பெரியார் கொள்கைகளை பின்பற்ற வேண்டும். பெரியார், அம்பேத்கர் கொள்கைகளை திருமாவளவன் பின்பற்றுகிறார். 

ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம், தெலங்கானாவில் பாஜகவால் நுழைய முடியாது. கர்நாடகத்தில் நுழைந்துள்ளனர். அவர்களை வீழ்த்துவோம். அதற்காக முயன்று வருகிறோம். 

வரும் தேர்தலில் பாஜக, ஆர்எஸ்எஸ் -ஐ வீழ்த்துவோம் என்று சித்தாரமையா கூறினார்.
 
முதல்வருடான சந்திப்பின்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி , திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் உடனிருந்தனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT