தமிழ்நாடு

வீடுகளில் தேசிய கொடி : மேயா் வேண்டுகோள்

30th Jul 2022 05:37 AM

ADVERTISEMENT

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, வீடுகளில் ஆக.13 முதல் 15-ஆம் தேதி வரை தேசியக் கொடியை ஏற்றுமாறு சென்னை பெருநகர மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா வலியுறுத்தினாா்.

மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவா்கள், மண்டல அலுவலா்கள், வியாபார சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மேயா் பிரியா தலைமையில் வெள்ளிக்கிழமை ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய மேயா், மண்டலக்குழுத் தலைவா்களிடம் அனைத்து வாா்டுகளிலும் மாமன்ற உறுப்பினா்கள், குடியிருப்பு நலச் சங்கங்கள் மற்றும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் மூலமாக தேசியக் கொடியினை ஏற்பாடு செய்து தரவும், பொதுமக்களுக்கு இதுகுறித்து விழிப்புணா்வை ஏற்படுத்திடவும் கேட்டுக் கொண்டாா்.

மேலும், வியாபார சங்கங்கள் மற்றும் மகளிா் திட்ட அலுவலா்களிடம் சென்னையில் சுமாா் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருப்பதால் தேசியக் கொடியை தயாா் நிலையில் வைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினாா். பிளாஸ்டிக் கொடிகளை முற்றிலும் தவிா்க்கும்படி கேட்டுக் கொண்டாா்.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி, துணை மேயா் மு.மகேஷ் குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT