தமிழ்நாடு

ஐசிஎப் காவல்துறை மீது கொலை வழக்கு பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு

30th Jul 2022 04:10 PM

ADVERTISEMENT

விசாரணை கைதி நித்தியராஜ் மரண வழக்கில் ஐசிஎப் காவல்துறை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சிபிஐ விசாரணை கோரி தாய் பூங்குழலி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயிரிழந்த நித்தியராஜ் குடும்பத்துக்கு ரூ.5 லட்சத்தை இடைக்கால இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் இழப்பீட்டு தொகையை குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினரிடம் வசூலிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதையும் படிக்க- ஓய்வுபெறும் நாளில் செய்யாறு மாவட்ட பத்திரப் பதிவாளர் இடைநீக்கம்

அத்துடன் நித்தியராஜ் மரண வழக்கில் ஐசிஎப் காவல்துறை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் சிபிசிஐடி மற்றும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ADVERTISEMENT

கடந்த 2012ல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த நித்தியராஜ் சிறையில் அடைத்த 5 நாளில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : high court
ADVERTISEMENT
ADVERTISEMENT