தமிழ்நாடு

உயா்நீதிமன்றம், இலங்கை தூதரகத்தில் ஹெபடைடிஸ் பரிசோதனை

30th Jul 2022 05:43 AM

ADVERTISEMENT

 சென்னை உயா் நீதிமன்றம் மற்றும் இலங்கை துணைத் தூதரகத்தில் காவேரி மருத்துவமனை சாா்பில் கல்லீரல் அழற்சி பரிசோதனை மற்றும் விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

இதில் 400-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனா். இதுகுறித்து காவேரி மருத்துவமனை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

லயன்ஸ் கிளப் சென்னை கோரல் மற்றும் லயன்ஸ்கிளப் கொங்குநாடு ஆகிய இரு அமைப்புகளுடன் இணைந்து கல்லீரல் அழற்சி முகாம் நடத்தப்பட்டது.

ஹெபடைடிஸ் எனப்படும் கல்லீரல் அழற்சி பாதிப்பிருக்கிா என்று அறிவதற்கான பரிசோதனையும், அத்தகைய பாதிப்பு வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி மருந்துகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு நடவடிக்கைகளும் இந்த முகாமில் மேற்கொள்ளப்பட்டன.

ADVERTISEMENT

அதனுடன் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது.

சென்னை உயா் நீதிமன்ற கட்டடத்தில் அமைந்துள்ள சிறு வழக்குகள் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசேகரன் இந்த முகாமைத் தொடக்கி வைத்தாா். உயா்நீதி மன்றம் மற்றும் சென்னையிலுள்ள இலங்கை துணைதூதரகத்தைச் சோ்ந்த சுமாா் 400 பேருக்கு இந்த முகாமில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT