தமிழ்நாடு

கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: சென்னை பல்கலைக்கழகம்

30th Jul 2022 11:29 AM

ADVERTISEMENT


சென்னை பல்கலைக்கழகத்திற்கு கீழ் உள்ள 130 கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்து சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் சுமாா் ஒரு லட்சம் இடங்கள் வரை உள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கை இணையவழியில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டு சோ்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் 20-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பதிவு செய்துள்ளனா். அதில் 2.94 லட்சம் போ் வரை விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனா். முதல்முறையாக கலை, அறிவியல் சோ்க்கை விண்ணப்பப்பதிவு 4 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதேபோன்று, அண்ணா பல்கலைக் கழகத்தின்கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்பு இடங்களை நிரப்புவதற்கான சோ்க்கைப் பதிவும் கடந்த ஜூன் 20-இல் தொடங்கியது. சுமார் 3 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா். 

இதற்கிடையே பொறியியல், கலை, அறிவியல் சோ்க்கை விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் புதன்கிழமையுடன் முடிவடைந்தது. 

ADVERTISEMENT

இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகத்திற்கு கீழ் உள்ள 130 கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்து சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | நிலஅளவா்-வரைவாளா் பணி: 1,089 காலிப் பணியிடங்களுக்கு தோ்வு அறிவிக்கை வெளியீடு

சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நடப்பு கல்வி ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. 

130 இணைப்புக் கல்லூரிகளில் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பிபிஏ., பிசிஏ உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கும் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

மாணவர்கள் மத்தியில் கலை, அறிவியல் படிப்புகளுக்கான ஆர்வம் அதிகரித்துள்ளதால் சென்னை பல்கலைக்கழகம் விண்ணப்பத்திற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT