தமிழ்நாடு

ஆக. 1ல் அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

30th Jul 2022 07:55 AM

ADVERTISEMENT

வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. 

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி வரும் ஆகஸ்ட் 1 ஆம்  தேதி தொடங்குகிறது. வருகிற 2023 மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில், சென்னையில் ஆகஸ்ட் 1 - ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஒத்துழைப்பு அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தலைமைச் செயலகத்தில் நடக்கும் இந்த ஆலோசனையில் அதிமுக சார்பில் யாருக்கு அழைப்பு விடுக்கப்படும்? யார் கலந்து கொள்வார்கள்? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இதுகுறித்து தேர்தல் ஆணையம், 'வழக்கம்போல கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். அழைப்புக் கடிதத்தை யார் பெறுகிறார்களோ அவர்கள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது' என்று கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT