தமிழ்நாடு

திமுக கொள்கைக் கூட்டணி தொடரும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

30th Jul 2022 11:39 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் திமுக தலைமையிலான கொள்கைக் கூட்டணி தொடரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கேரள மாநிலம் திருச்சூரில் மனோரமா நியூஸ் கான்க்ளேவ் 2022 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் காணொலி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். உரை முடிந்து அவரிடம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் சில கேள்விகளை எழுப்ப அதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

அப்போது கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்துவரும் நிலையில், தமிழகத்தில் திமுக - மார்க்சிஸ்ட் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்குப் பதில் அளித்த முதல்வர், 'தமிழகத்தில் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் எங்களுக்கு ஆலோசனைகளைத் தருகிறார்கள், பிரச்னைகளை எடுத்துரைக்கிறார்கள். 

ADVERTISEMENT

திமுக கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி அல்ல, கொள்கைக்கான கூட்டணி. இந்த கூட்டணி ஆரோக்கியமான முறையில் தொடரும்' என்றார்.

முன்னதாக, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகையாலும், விழாவுக்கான தமிழக அரசின் ஏற்பாடுகளை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டியதாலும் திமுகவுடன் பாஜக கூட்டணி சேருகிறதா? என்ற கோணத்தில் கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளது அதற்கு பதில் அளிப்பதாக உள்ளது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT