தமிழ்நாடு

தமிழகத்தில் ஆகஸ்ட் 2 வரை கனமழைக்கு வாய்ப்பு

DIN


தமிழகத்தில் ஆகஸ்ட் 2 வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

தமிழகத்தின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஆகஸ்ட் 2 வரை நீலகிரி, கோவை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

நாளை சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

மேலும், ஆகஸ்ட் 2 வரை நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 

சென்னையை பொருத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரையிறுதியில் பயா்ன் மியுனிக், ரியல் மாட்ரிட்: மான். சிட்டி, ஆா்செனலுக்கு ஏமாற்றம்

சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேல் கப்பலிலிருந்து தாயகம் திரும்பிய இந்திய பெண் மாலுமி

தேசத்தில் ஒற்றுமையின்மையை பாஜக ஏற்படுத்துகிறது: ராகுல்

உள்நாட்டு தொழில்நுட்ப ‘க்ரூஸ்’ ஏவுகணை சோதனை வெற்றி: டிஆா்டிஓ

நடிகா் அமீா் கானின் போலி தோ்தல் பிரசார விடியோ: மும்பை போலீஸ் வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT