தமிழ்நாடு

திருவையாறு காவிரி கரையில் ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம்

28th Jul 2022 08:48 AM

ADVERTISEMENT

தஞ்சாவூர்: ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவையாறு காவிரி கரையில்  தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு புஷ்ய காவிரி  படிதுறையில், ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்பணம் கொடுப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து காவிரியில் புனித நீராடி,  முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர்.

இந்நிலையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திருவையாறு பகுதியில் குவிந்ததால் திருவையாறு முழுவதும் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், பணிக்கு செல்லுவோர் மிகந்தசிரமத்திற்கு ஆளாகினர்.

இதையும் படிக்க | தி லெஜெண்ட் - திரை விமர்சனம் - ஹீரோவாக வெல்வாரா லெஜெண்ட்?

ADVERTISEMENT
ADVERTISEMENT