தமிழ்நாடு

தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

28th Jul 2022 12:41 PM

ADVERTISEMENT

சென்னை: தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருக்கிறதா என்று தீவிரமாக பரிசோதிக்கப்படுகிறது. தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு மற்றும் அறிகுறிகள் தென்படவில்லை.

இதுவரை வந்த எந்த செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு வீரர்களுக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் தென்படவில்லை. செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டால் தனிமைப்படுத்தப்படுவர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: மாநிலங்களவையில் இருந்து மேலும் 3 எம்.பி.க்கள் இடைநீக்கம்

சென்னையில் குரங்கு அம்மை ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கிண்டி கிங் இன்ஸ்டியூட்டில் குரங்கு அம்மை பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT