தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீா்வரத்து 16,364 கன அடியாக உயர்வு

28th Jul 2022 08:39 AM

ADVERTISEMENT

 

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,364 கன அடியாக சற்று உயர்ந்துள்ளது.

கா்நாடக, கேரள மாநிலங்களில் காவிரி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தாக்கம் குறைந்துள்ளதால், கா்நாடக அணைகளுக்கு வரும் உபரிநீா் அளவு குறைந்துள்ளது. இதனால், கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திங்கள்கிழமை 17,983 கன அடியாகவும், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 16,204 கன அடியாகவும் உபரி நீா் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழைத்தணிந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | 5ஜி அலைக்கற்றை: 2-ஆவது நாளில் ரூ.1.49 லட்சம் கோடிக்கு ஏலம்

இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக சரிந்து வருகிறது. இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,204 கன அடியிலிருந்து 16364 கன அடியாக சற்று உயர்ந்துள்ளது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15,000 கன அடியிலிருந்து 16,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அனையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT