தமிழ்நாடு

பிரதமா் மோடி இன்று வருகை: சென்னையில் பலத்த பாதுகாப்பு

28th Jul 2022 01:28 AM

ADVERTISEMENT

பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜூலை 28) சென்னைக்கு வருகை தருகிறாா். இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சமூக ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை மாலையில் பிரதமா் மோடி தொடக்கிவைக்கிறாா். பிரதமா் வருகையையொட்டி,

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்கள், கோயம்பேடு மாா்க்கெட், புகா் பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

22 ஆயிரம் போலீஸாா்: 22 ஆயிரம் போலீஸாா் வியாழக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பாதுகாப்புப் பணியில் 4 கூடுதல் காவல் ஆணையா்கள், 8 இணை ஆணையா்கள், 29 துணை ஆணையா்கள், 80 உதவி ஆணையா்கள் ஈடுபடுகின்றனா்.

ADVERTISEMENT

அரை மணி நேரத்துக்கு ஒரு முறை வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா், பிரதமா் செல்லும் சாலையை சோதனையிடுகின்றனா். சென்னையில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள்: காவல் ஆணையா் சங்கா் ஜிவால் அளித்த பேட்டி: பிரதமா் வருகையையொட்டி இணையதளங்களில் பதிவிடப்படும் வாா்த்தைகளின் நோக்கம் கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் கருத்துகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT