தமிழ்நாடு

செஸ் ஒலிம்பியாட்: கண்களைக் கட்டியபடி இசையமைத்த லிடியன்

28th Jul 2022 06:04 PM

ADVERTISEMENT

 

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில், செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்ச்சியில் கண்களைக் கட்டியபடி இசைமையத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் லிடியன் நாதஸ்வரம்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கி ஆக. 10-ஆம் தேதி வரை 14 நாள்கள் நடைபெறுகின்றன.

இதையும் படிக்க: செஸ் ஒலிம்பியாட்: பட்டு வேட்டி, சட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்

ADVERTISEMENT

இந்நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் துவக்க விழாவில் லிடியன் நாதஸ்வரம் தனது இசைத் திறமையால் கண்களைக் கட்டியபடி பியனோவை வாசித்து பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இளையராஜாவுடன் லிடியன் நாதஸ்வரம்

லிடியன் உலக அளவில் பிரபலமானவர். வேகமாக பியோனா வாசித்து சாதனை புரிந்திருக்கிறார். சிபிஎஸ் தொலைக்காட்சி சாதனையாளர்கள்  நிகழ்ச்சியில் 2019 ஆம் ஆண்டுக்கான உலகின் தலை சிறந்த கலைஞன் என்ற பட்டம் பெற்றவர். 

இதுமட்டுமல்லாமல் 14 இசைக் கருவிகளை வாசிக்கக் கூடியவர். தற்போது மோகன்லால் நடிக்கும் பரோஸ் என்ற படத்துக்கு லிடியன் இசையமைத்து வருகிறார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT