தமிழ்நாடு

செஸ் ஒலிம்பியாட் விளம்பரம்: பிரதமர் படத்தை  சேர்க்கக்  கோரிய வழக்கு ஒத்திவைப்பு

28th Jul 2022 02:18 PM

ADVERTISEMENT

மதுரை: செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் படத்தை சேர்க்கக் கோரிய வழக்கை  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்துள்ளது.

சிவகங்கையை சேர்ந்த ராஜேஷ்குமார் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்தி வைத்ததுள்ளது.

ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் சூழலில் நாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும். குடியரசு தலைவர், பிரதமரின் கீழ் நாடு நிர்வகிக்கப்படும் நிலையில் சர்வதேச நிகழ்வை இணைந்து நடத்த வேண்டும்.

குடியரசு தலைவர், பிரதமர் கலந்து கொள்ளவில்லை என்றாலும் புகைப்படம் இடம் பெற்று இருக்கலாமே என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க: ஆடி அமாவாசையை முன்னிட்டு சுருளி அருவியில் நீராடிய பக்தர்கள்!

செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில், இன்றைய நாளிதழில்  பிரதமர் படம் இடம் பெற்றுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT