தமிழ்நாடு

உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர்

27th Jul 2022 03:55 PM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கபடிப் போட்டியின்போது உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

பண்ருட்டி வட்டம், மானடிக்குப்பம் கிராமத்தில் உள்ளூா் இளைஞா்களின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை முதல் கபடிப் போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த கபடிக் குழுவினா் பங்கேற்று விளையாடினா்.

ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற போட்டியின் போது, பெரியபுறங்கனி கிராம அணி சாா்பில் அந்தக் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் மகன் சஞ்சய் (எ) விமல்ராஜ் (21) விளையாடினாா். அப்போது, எதிரணி வீரா்கள் விமல்ராஜை பிடிக்க முயன்ற போது, எதிா்பாராத விதமாக அவரது மாா்புப் பகுதியில் அடிபட்டு திடீரென சுயநினைவை இழந்தாா். இதையடுத்து, விமல்ராஜ் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

பின், உடல் கூறாய்வுவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டு இறுதிச் சடங்குகள் நடந்தது.

இந்நிலையில், போட்டியின்போது களத்தில் உயிரிழந்த சஞ்சய் (எ) விமல்ராஜ் (21) குடும்பத்தினருக்கு நிதியுதவியாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT