தமிழ்நாடு

துவங்கியது செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்

27th Jul 2022 04:34 PM

ADVERTISEMENT

 

சென்னை மாநிலக் கல்லூரியிலிருந்து செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்  தொடங்கியது.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை (ஜூலை 28) தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இதையொட்டி தமிழக அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இதன் தொடக்கவிழா நாளை (ஜூலை 28) மாலை, சென்னை ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநயத்துடன் பாரம்பரிய முறையில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

இதன் தொடர்ச்சியாக, தொடக்க விழாவுக்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இன்று காலை நேரு ஸ்டேடியத்திற்கு வந்த அவர் அதிகாரிகளிடம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். 

இந்நிலையில், நாட்டின் 75 நகரங்களைக் கடந்துவந்துள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஜோதியை தற்போது நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு கொண்டுசெல்லும் தொடர் ஓட்டம் சென்னை மாநிலக் கல்லூரி மைதானத்திலிருந்து துவங்கியுள்ளது.

ஜோதியை சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திடம் ஒப்படைத்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT