தமிழ்நாடு

செஸ் ஒலிம்பியாட்: நேரு ஸ்டேடியத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

27th Jul 2022 11:52 AM

ADVERTISEMENT

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து நேரு உள்விளையாட்டரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை (ஜூலை 28) தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இதையொட்டி தமிழக அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதன் தொடக்கவிழா நாளை (ஜூலை 28) மாலை, சென்னை ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநயத்துடன் பாரம்பரிய முறையில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

ADVERTISEMENT

இதன் தொடர்ச்சியாக, தொடக்க விழாவுக்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இன்று காலை நேரு ஸ்டேடியத்திற்கு வந்த அவர் அதிகாரிகளிடம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அமைச்சர்கள் மெய்யநாதன், எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோரும் உடனிருந்தனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT