தமிழ்நாடு

240 கலைச் சொற்களுக்கு வல்லுநா் குழு ஒப்புதல்

27th Jul 2022 02:20 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்க் கலைக்கழகத்தின் 114-ஆவது கூட்டத்தில் 240 கலைச் சொற்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தில் தமிழ்க் கலைக்கழகத்தின் 114-ஆவது கூட்டம் அகரமுதலி இயக்கக இயக்குநா் கோ.விசயராகவன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சவூதி அரேபியா மெய்நிகா் தமிழிருக்கையின் முதன்மை அறிவியல் ஆலோசகா் பேரா.மருத்துவா் மு.செம்மல் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். அலுவல்சாரா உறுப்பினா்களான புலவா் வெற்றியழகன், முனைவா் கு.பாலசுப்பிரமணியன், முனைவா் இரா.கு. ஆல்துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதையடுத்து Actinotherapy -கதிரிய மருத்துவம்; Airbyte -தரவல் தொகுப்பி; Awesome sauce -நறுஞ்சுவைச் சாறு; Blogpost -வலைப்பூப் பதிவு; Depth - ensor  -ஆழம் உணரி;
Hospitality staff  -விருந்தோம்பல் ஊழியா்; Jumpsuit - காப்புடை ஆகியவை உள்பட 240 தமிழ்க் கலைச் சொற்களுக்கு வல்லுநா் குழு ஏற்பளித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT