தமிழ்நாடு

மாணவி மரணம்: 'குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்'

17th Jul 2022 01:32 PM

ADVERTISEMENT


கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கலவரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், உள்துறை செயலாளர், காவல் துறை தலைமை இயக்குநர் ஆகியோர் கள்ளக்குறிச்சி செல்ல உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் மர்மான முறையில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொண்டார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் உறவினர்கள் கடந்த 5 நாள்களாக அமைதியான முறையில் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

படிக்க'காவலர்களைத் தாக்கியதற்கு கண்டனம்: போராட்டத்தைக் கைவிட வேண்டுகோள்'

இந்நிலையில், இன்று போராட்டத்திற்கு அதிக அளவிலான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் பள்ளி மீது கற்களை வீசி சூறையாடினர். 

போராட்டக்காரர்களை தடுக்க முயன்றபோது, காவலர்கள் மீதும் போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் டிஐஜி உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். மேலும், பள்ளி வாகனங்களை அடித்து நொறுக்கி தீயிட்டு எடித்தனர். சாலையோரம் இருந்த காவல் துறை வாகனத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

படிக்க பிளஸ் 2 மாணவி மரணம்: பேருந்துகளுக்கு தீ வைப்பு; 20 காவலர்கள் படுகாயம்

இந்நிலையில், போராட்டத்தைக் கைவிட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இது தொடர்பாக சுட்டுரையில அவர் பதிவிட்டுள்ளதாவது, உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன். 

படிக்க | கள்ளக்குறிச்சி கலவரம்: உளவுத் துறையுடன் டிஜிபி ஆலோசனை

கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT