முதல்வர் மு.க.ஸ்டாலின் கரோனா தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வீடு திரும்புவார் என்றும், ஒரு வாரத்திற்கு வீட்டில் இருந்தபடி ஓய்வெடுக்க வேண்டும் எனவும் மருத்துவமனை தனது அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது.
படிக்க | நாட்டில் புதிதாக 20,528 பேருக்கு கரோனா; 49 பேர் பலி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12ஆம் தேதி கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் உடல்நலம் தேறி வருவதாகவும் எனினும் சில நாள்களுக்கு ஓய்வு தேவை என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கரோனா தொற்றிலிருந்து முழுவதும் குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.