கர்நாடக அணைகளிலிருந்து 1.15 லட்சம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதால், உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிருஷ்ணசாகர் அணையிலிருந்து 83.83 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் கபினி அணையிலிருந்து 32 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
படிக்க | மேட்டூர் நிரம்பியது: நீர் திறப்பு 1.28 லட்சம் கன அடியாக உயர்வு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நீர்வரத்து நேற்று முன்தினம் 1.20 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிப்பதற்கும், பரிசல் சவாரி செய்வதற்கும் தடை நீடிக்கிறது.