தமிழ்நாடு

முன்னாள் குடியரசுத் தலைவா் வீட்டு பணிப்பெண்ணிடம் வழிப்பறி

17th Jul 2022 12:24 AM

ADVERTISEMENT

சென்னை மயிலாப்பூரில் முன்னாள் குடியரசுத் தலைவா் வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் வழிப்பறி செய்யப்பட்டது.

வேலூா் மாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள காவேரிப்பாக்கம் அபிராமபுரத்தைச் சோ்ந்தவா் சா.அஞ்சலி (25). செவிலியரான இவா், சென்னை மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் வசிக்கும் முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினா் வீட்டில் வேலை செய்து வருகிறாா்.

இதற்காக அஞ்சலி, மயிலாப்பூா் பகுதியில் தங்கியிருந்தாா்.

அஞ்சலி வெள்ளிக்கிழமை இரவு வேலை முடிந்து டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு தனியாா் வங்கியிடம் நடந்து வந்தபோது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த இரு நபா்கள், அஞ்சலி கையில் வைத்திருந்த விலை உயா்ந்த கைப்பேசியை பறித்துக் கொண்டு தப்பினா்.

ADVERTISEMENT

இது குறித்து அஞ்சலி அளித்த புகாரின்பேரில் ராயப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, ஆய்வு செய்தனா். இதில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ராயப்பேட்டையைச் சோ்ந்த அகில் அகமது (47), அவரது கூட்டாளி அதே பகுதியைச் சோ்ந்த முகமது அல்தாப் (28) என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, அஞ்சலியின் கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT