தமிழ்நாடு

ஈரோட்டில் 9 மாவட்ட தீயணைப்பு வீரர்களுக்கு மண்டல அளவிலான விளையாட்டு போட்டி தொடங்கியது!

7th Jul 2022 10:41 AM

ADVERTISEMENT


ஈரோடு: ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் தீயணைப்பு வீரர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டி வியாழக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

போட்யை மேற்கு மண்டல தீயணைப்பு துறை இணை இயக்குநர் சத்தியநாராயணன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி முன்னிலை வகித்தார். 

போட்டிகளுக்கு விளையாட்டு மைதானத்தை தயார் செய்யும் தீயணைப்பு வீரர்கள்.

ADVERTISEMENT

இந்த போட்டிகளில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். 

இதையும் படிக்க | தமிழக பட்டியலின மக்களின் முதல் பட்டதாரி இரட்டை மலையார் - முதல்வர் புகழாரம்

முன்னதாக வீரர்களுக்கு துறை ரீதியான திறன் மேம்பாட்டு போட்டிகளும், தொடர்ந்து கூடைபந்து, இறகுபந்து, வாலிபால், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100 மீ, 400 மீ, 1500 மீட்டம் ஓட்டம்  நடந்து வருகிறது. 

போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடத்தை பிடிப்பவர்கள் மாநில விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர். 

போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பதக்கம்,பாராட்டு சான்றிதழ், ரொக்க பரிசு வழங்கப்படும். போட்டிகள் தொடர்ந்து நாளையும் நடக்கிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT