தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கோரிய கூடுதல் மனுக்களும் தள்ளுபடி

7th Jul 2022 01:48 PM

ADVERTISEMENT

சென்னை: வரும் 11-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை விதிக்கக் கோரிய கூடுதல் மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுக்குழுவுக்குத் தடை கோரி ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், இரு நீதிபதிகள் அமர்வில் இருந்த இந்த கூடுதல் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி மீதான நீதிமன்ற அவமதிப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இடைக்கால நிவாரணமாக பொதுக்குழுவுக்குத் தடை விதிக்கக் கோரிய கூடுதல் மனுக்களையும் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க.. அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு

ADVERTISEMENT

உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த சண்முகம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT