தமிழ்நாடு

தேவைக்கு அதிகமாக உரமிட்டால் நோய் தாக்கும்: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்

7th Jul 2022 01:45 PM

ADVERTISEMENT

சென்னை: பயிரின் தேவைக்கு அதிகமாக உரமிட்டால் செலவு அதிகமாகி பூச்சி, நோய் தாக்குதல் ஏற்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

பயிரின் தேவைக்கேற்ப உரத்தை கொள்முதல் செய்து விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். மாவட்டகளின் தேவைக்கேற்ப உரங்களை இருப்பு வைத்து விநியோகம் செய்திட தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

காவிரி டெல்டா விவசாயிகள் தேவைக்காக 93,000 மெட்ரிக் டன்  உரங்கள் கையிருப்பில் உள்ளன என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: திருச்செந்தூர் கோயிலில் நாளை முதல் சில கட்டணங்கள் ரத்து

ADVERTISEMENT

யூரியா உரம் 25,310 மெ.டன், டிஏபி -20,000 மெ.டன், பொட்டாஷ் -13,360, காம்ப்ளக்ஸ் உரம் -34430 மெ.டன் இருப்பில் உள்ளது. உரங்கள் இருப்பு தொடர்பாக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT