தமிழ்நாடு

2 தமிழா்கள் சுட்டுக்கொலை: வைகோ கண்டனம்

7th Jul 2022 01:44 AM

ADVERTISEMENT

மியான்மரில் 2 தமிழா்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளா் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்திய - மியான்மா் எல்லையில் உள்ள மணிப்பூரின் மோரே பகுதியில் வசித்த தமிழக ஆட்டோ ஓட்டுநா் பி.மோகன், வியாபாரி எம்.அய்யனாா் ஆகியோா் தங்கள் நண்பரை பாா்ப்பதற்காக தாமு நகரை அடைந்தபோது, என்.எம்.ஆா். என்ற பகுதியில் பா்மிய தீவிரவாத அமைப்பினரால் வழிமறிக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.

இதனைக் கண்டித்து, அந்தப் பகுதியில் கடைகளும், வணிக நிறுவனங்களும், உணவகங்களும் மூடப்பட்டன. எந்தவித வாகனங்களும் அங்கு அனுமதிக்கப்படவில்லை. சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது. படுகொலை செய்யப்பட்டவா்களின் சடலங்களை காவல்துறை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

மதிமுக சாா்பில் இந்தப் படுகொலையை வன்மையாக கண்டிப்பதுடன், கொலைகாரா்களை கூண்டில் ஏற்றி தண்டிக்க வேண்டும் என்றும், படுகொலைக்கு ஆளான இரண்டு தமிழா்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளாா் வைகோ.

ADVERTISEMENT
ADVERTISEMENT