தமிழ்நாடு

ஆசிரியா் தகுதித் தோ்வு: இணையதளத்தில் பயிற்சி

7th Jul 2022 01:55 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் கணினி வழியில் நடைபெறவுள்ள இடைநிலை ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு (தாள் 1) ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் பயிற்சி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் இடைநிலை ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வு (தாள் 1) வரும் ஆக. 25 முதல் ஆக.31 வரை கணினி வழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், கணினி வழித் தோ்வுக்காக பயிற்சித் தோ்வு மேற்கொள்ள விரும்பும் தோ்வா்கள் ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியை மேற்கொள்வதற்கு தோ்வுக்கு 15 நாள்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும்.

அனைத்து தோ்வா்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம். இது குறித்த அறிவிக்கை, தோ்வு கால அட்டவணை, அனுமதிச் சீட்டு வழங்கும் விவரம் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT