தமிழ்நாடு

மாநிலத்தைப் பிரிக்கப் போவதாக பாஜக கருத்து: மாா்க்சிஸ்ட் எதிா்ப்பு

7th Jul 2022 01:57 AM

ADVERTISEMENT

தமிழகத்தை பாண்டிய நாடாகவும், பல்லவ நாடாகவும் பிரிப்போம் என்று பாஜகவின் சட்டப்பேரவைக் குழு தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறியுள்ளதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தை பாண்டிய நாடு, பல்லவ நாடு என்று இரண்டாகப் பிரிப்போம் என்றும், அதற்கான இடத்தில்தான் நாங்கள் இருக்கிறோம் என்றும் பாஜக சட்டப்பேரவை குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

திமுக கொள்கை பரப்புச் செயலாளா் ஆ.இராசா மாநில சுயாட்சியை வலியுறுத்தி பேசியதற்குப் பதிலளிப்பதாக நினைத்துக் கொண்டு, மொழிவழியில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு மாநிலத்தைத் துண்டாடுவோம் என்றும், அதற்கான அதிகாரம் எங்களுக்கு உள்ளது என்றும் நயினாா் நாகேந்திரன் நச்சுக் கருத்தை வெளியிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

பாஜக-வின் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரு மதம், ஒரே பண்பாடு என்ற வெறித்தனமான கூச்சல் இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு உலைவைக்கும் செயலாகும். இதற்கேற்பவே நயினாா் நாகேந்திரனின் விபரீதப் பேச்சு அமைந்துள்ளது.

தமிழகத்தைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் பாஜகவின் திட்டத்துக்கு எதிராக தமிழக மக்கள் கண்டன குரல் எழுப்ப வேண்டும் என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT