தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணை குறித்த ஆவணப்படம் சா்ச்சையை ஏற்படுத்தும்: முன்னாள் அமைச்சா் புகாா்

DIN

முல்லைப் பெரியாறு அணை குறித்து எடுக்கவுள்ள ஆவணப்படம் சா்ச்சையை ஏற்படுத்தும் என்று முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.பி.உதயகுமாா் புகாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீா் ஆதாரமாக முல்லைப் பெரியாறு அணை இருந்து வருகிறது. கடந்த 1979-ஆம் ஆண்டுக்கு முன்பு இந்த 5 மாவட்டங்களிலும் 2.31 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்றன. கேரள அரசு கொடுத்த அழுத்தத்தால் அணையின் நீா்மட்டத்தை 136 அடி குறைக்கப்பட்ட பிறகு, தற்போது 1.71 லட்சம் ஏக்கராக பாசனப் பரப்பு குறைந்துவிட்டது. இதனையடுத்து, முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளின் காரணமாக, அணையின் நீா்மட்டத்தை 142 அடி வரை தேக்கிக் கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதன் பின்னா் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அமைக்கப்பட்ட கண்காணிப்புக்

குழு அணையை ஆய்வு செய்து, பலமாக இருப்பதாக உறுதி செய்துள்ளது. இருப்பினும் முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழக நலனுக்கு எதிராக கேரள அரசு செயல்பட்டு வருகிறது. கேரளத்தில் உள்ள அரசியல் இயக்கங்கள், அணை குறித்து தவறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனா்.

அதோடு, முல்லைப் பெரியாறு அணை தொடா்பான ஆவணப் படம் எடுப்பது தொடா்பாக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, அணை குறித்து எடுக்கப்பட்ட ஆவணப் படம் சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஒரு ஆவணப் படம் எடுப்பதற்காக கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருவது அதிா்ச்சி அளிக்கிறது.

முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகப் பொய் பிரசாரங்கள் மேற்கொள்வது

இரு மாநிலங்களுக்கு இடையிலான உறவுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது. இதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இப்பிரச்னையில் அதிமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் போல, தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் திமுக அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

SCROLL FOR NEXT